பகிரி (Whats App) அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்

Report Print Samaran Samaran in தொழில்நுட்பம்

பகிரி (Whats App) நிறுவனத்தால் தமது பயனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது ஒருவருக்கு அனுப்பிய குறுந்தகவலை மீண்டும் திரும்பி பெறுவதற்கு, மற்றும் ஏழு நிமிடங்களுக்குள் அழிப்பதற்கு புதிய அப்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஒருவர் மற்றொருவருக்கு அனுப்பிய குறுந்தகவல்களை அழித்தாலும், அந்த தகவல் ஸ்மார்ட்போனில் இருக்கும் என்றும் இதனை மிக எளிமையாக இயக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறுந்தகவலை அனுப்பியவர் அதனை அழித்திருந்தாலும் அதனை பெறும் நபர் மிக இலகுவாக பார்க்க முடியும் என பகிரியின் (Whats App) வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரியில் (Whats App) குறுந்தகவல்களை அனுப்பியவர் அதனை அழித்திருந்தாலும், அவை ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் நோட்டிபிகேஷனில் பதிவு செய்யப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த செயலி வருவதனால் என்ன பயன்? என்னும் கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers