அறிமுகமானது டிரம்ப் மற்றும் புடின் சின்னம் பொறித்த செல்போன்: என்ன விலை?

Report Print Raju Raju in தொழில்நுட்பம்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பும், ரஷ்யா ஜனாதிபதி புடினும் அவர்கள் உருவம் பொறித்த நோக்கியா 3310 என்ற புதிய செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஜேர்மனியில் நடைப்பெற்று வரும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பும், ரஷ்யா ஜனாதிபதி புடினும் கலந்து கொண்டனர்.

அங்கு இருவரும் சேர்ந்து நோக்கியா 3310 என்ற 2017ம் ஆண்டுக்கான புதிய செல்போனை அறிமுகப்படுத்தினர்.

இந்த மொடல் போன் மீது தங்கம் பூசப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் புடின் ஆகியோரின் உருவம் பொறித்த சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 2 சிம்கார்டுகள், 2 மெகாபிக்சல் காமெரா, 2.4-inch QVGA வண்ண தொடுதிரை போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது.

இந்த மொடல் செல்போனின் அறிமுக விலை 1.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments