தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கும் பேஸ்புக்: இதோ விபரம்!

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

Netflix மற்றும் Amazon ஆகிய நிறுவனங்கள் தொலைக்காட்சி சேவையினை ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகின்றன. இவற்றிற்கு பல்லாயிரக்கணக்கான பயனர்களும் உள்ளனர்.

தற்போது இதனை ஒத்த தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில ஸ்டூடியோக்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் நாடகங்கள், கேம்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் ஆர்வம்காட்டி வருகின்றது.

எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments