இறந்த நாயை மீட்டுக்கொள்ள உதவும் புதிய குளோனிங் வசதி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
இறந்த நாயை மீட்டுக்கொள்ள உதவும் புதிய குளோனிங் வசதி
219Shares

Sooam Biotech Research Foundation மூலம் இனி உங்கள் இறந்து போன நாயை US$100,000 கொடுத்து மீட்டுக்கொள்ளலாம்.

இது செல்லப்பிராணிகள் மீது அன்பு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான்.

மேற்படி நிறுவனம் மருத்துவ ஆராய்ச்சி, இனங்களை பாதுகாப்பதற்கென மாடு, பன்றிகளை குளோனிங் செய்வதிலும், நோய்களை கட்டுப்படுத்த பரம்பரையலகு மாற்றியமைக்கப்பட்ட விலங்குகளை உருவாக்குவதிலும் சிறந்து விளங்குகின்றது.

ஆனாலும் நாய் குளோனிங் சேவை மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களே தம்மகத்தே ஈர்த்துக்கொள்ள முடிந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வரைக்கும் இந் நிறுவனம் கிட்டத்தட்ட 800 நாய்களை குளோனிங் செய்துள்ளனர்.

இந்த செயற்பாடு இறந்துபோன உங்கள் நாய்களை ஈர துணிகளால் மூடி, குளிரூட்டியில் வைப்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது.

பின்னர் 5 நாட்களுக்குள் அதன் முதிர்ந்த கலத்திலிருந்து DNA பிரித்தெடுக்கப்பட்டு, அதன் பிரதியானது வழங்கி முட்டைக் கலத்துடன் இணைக்கப்படுகிறது.

இச்செயற்பாட்டின் முன்னர் வழங்கி முட்டைக்கலத்தின் பரம்பரை திரவியம் அகற்றப்படுகிறது.

குறித்த முளையமானது வாடகைத் தாய் நாயினுள் பதிக்கப்பட்டு 2 மாத காலமளவில் இறந்து போன நாய் மீண்டும் சிறு நாய்க்குட்டியாக பெறப்படுகிறது.

தற்போது குறித்த கம்பனி, உறைந்து போன பெரிய விலங்குகளை குளோனிங் செய்வதற்கென தங்கள் உரிமையை மற்றைய ஆராய்ச்சியாளர்களுக்கும் கொடுத்துள்ளது.

என்னதான் தாங்களாக குளோனிங் செய்தாலும் மேற்படி நிறுவனத்தின் நிறுவுனர் Hwang க்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட கெட்ட பெயரால் கம்பனியின் தார்மீக மற்றும் ஒழுக்க அடித்தளம் கேள்வியாகவே இருக்கிறது.

அதாவது கடந்த 2004, 2005 இல் குளோனிங் மூலம் மனித முளையங்களை வெற்றிகரமாக வளரத்தாக கூறியிருந்தார்.

இது பின்னர் வதந்தியென இனங்காணப்பட்டு 2009 இல் இடைநீக்கம் செய்யப்பட்டு, உயிரியல் ஒழுக்கங்களை மீறியதற்காக இரு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.

மீண்டும் தமது நற்பெயரை விஞ்ஞான முன்னேற்றங்களினூடு தான் கொண்டுவர முடியும் என Hwang நம்பிக்கை தெருவிக்கிறார்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments