சுவிஸில் சுகாதாரப் பணியாளர்களுடன் இவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி: வலுக்கும் கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
9997Shares

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கும் சுகாதாரப்பணியாளர்களுடன் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா பாதிப்பு சிறார்களிடம் காணப்படுகிறது.

இதனால் பாடசாலைகளில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக பாஸல் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்ட தனியார் வானொலி ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்தமுள்ள மக்கள் தொகையில் 3.6 சதவீதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களில் 6.3 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த எண்ணிக்கை கவலை அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பாஸல் மண்டல ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர், ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் மண்டல நிர்வாகத்தை பலமுறை அணுகியும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கும் கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சி ஒன்று முன்வைத்துள்ளது.

சுகாதாரப்பணியாளர்களுடன் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்