சுவிட்சர்லாந்தில் செவிலியர்களை அடுத்து, அந்த முடிவை எடுத்துள்ள மருத்துவர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
781Shares

சுவிட்சர்லாந்தில் மருத்துவ ஊழியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துகொள்ள மறுத்து வரும் நிலையில், தற்போது மருத்துவர்களும் அதில் இணைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து முழுவதும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனவரி 4 முதல் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் ஆபத்துக்கு உள்ளாகலாம் என்ற நோயாளிகளுக்கு மண்டலம் தோறும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து அடுத்தகட்டமாக மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.

ஆனால் மருத்துவ ஊழியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி பத்து செவிலியர்களில் ஒருவர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மருத்துவர்களும் செவிலியர்களின் அந்த பட்டியலில் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து முழுவதும் சுமார் 30 சதவீத மருத்துவர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, பெரும்பாலான மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எனவும், அவர்களுக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நம்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் அதிக நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்