சுவிஸில் முதன்முறையாக பதிவான சம்பவம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
558Shares

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக ஒரு பூனை இலக்காகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வளர்ப்பு நாய்களைப் போலவே, கொரோனா பரப்புவதில் பூனைகள் முக்கிய பங்கு வகிப்பதாக இதுவரை உத்தியோகப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சுவிட்சர்லாந்தில் தற்போது பூனை ஒன்று கொரோனா தொற்றுக்கு இலக்கான சம்பவத்தை சூரிச் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஆராய்ச்சி திட்டத்தின் அடிப்படையில் குறித்த பூனை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது எனவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளா நபரின் குடியிருப்பில் வளர்க்கப்பட்ட பூனை அது எனவும் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னர் பல நாடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற போதும், கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்களாலையே, அவர்களின் வளர்ப்பு பிராணிகளுக்கும் கொரோனா பரவியுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது.

மனிதர்களிடமிருந்து பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது அரிதானது என்றாலும் அதை நிராகரிக்க முடியாது என சுவிஸ் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை விவகாரங்களுக்கான பெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், வளர்ப்பு பிராணிகளையும் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்த தேவை இல்லை எனவும், கொரோனா அறிகுறிகளை அவை வெளிப்படுத்துவதில்லை எனவும் பெடரல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து கொரோனா பரவும் என்ற அச்சம் தேவை இல்லை எனவும் பெடரல் அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்