பிரான்சின் அதிரடி முடிவால் சுவிட்சர்லாந்துக்கு நெருக்கடி! பிரதமர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in சுவிற்சர்லாந்து
790Shares

தங்கள் குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க எல்லையில் சோதனை சாவடி அமைக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரான்சின் இந்த முடிவால் சுவிட்சர்லாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தங்கள் குடிமக்கள் வெளிநாட்டில் பனிச்சறுக்குவதைத் தடுக்கும் வகையில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் பனிச்சறுக்கு விடுமுறைக்கு சென்று நாடு திரும்பும் குடிமக்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.

சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயினுடனான எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் செய்ததைப் போல சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஜனவரி வரை குளிர்கால விளையாட்டு இடங்களை மூடாவிட்டால் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

ஸ்பெயினிலோ அல்லது சுவிட்சர்லாந்திலோ மக்கள் பனிச்சறுக்கு செல்லக்கூடாது என்பதே இதிலிருந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று காஸ்டெக்ஸ் கூறினார்.

எனினும், எல்லை தாண்டிய பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்