கோரப்பிடியில் சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலம்: காரணம் புரியாமல் அதிகாரிகள் தவிப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
638Shares

சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிவடைந்துவரும் நிலையில், பாஸல் மண்டலத்தில் மட்டும் அதன் தாக்கம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஸல் மண்டலத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் நிலைமை கட்டுக்குள் இருந்த நிலையில்,

தற்போது பதிவு செய்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பல நாட்களாக அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து டிசம்பர் 13 வரை உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேசினோக்கள் மற்றும் சிற்றின்ப கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையவில்லை என்றால், நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என சுகாதார இயக்குனர் Lukas Engelberger சூசகமாக தெரிவித்துள்ளார்.

எஞ்சிய மண்டலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில், பாஸல் மண்டலத்தில் மட்டும் எண்ணிக்கை அதிகரிப்பது புதிராக உள்ளது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாவது, குடும்ப உறுப்பினர்களாலையே எனவும், பணி இடங்களில் இருந்து 16 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட சந்திப்புகளால் 10 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாஸல் மண்டல மக்கள் இப்போது அவர்களின் கவனக்குறைவால் தண்டிக்கப்படுகிறார்கள் என்றே சுகாதார இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்