கொரோனா தொற்றுடனேயே பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்: 280 பேர் பாதிப்புக்குள்ளானதால் நடவடிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
652Shares

சுவிட்சர்லாந்தில், தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண் ஒருவரால் ஏராளமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.

Camilla (21) என்ற இளம்பெண், தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும், தனிமைப்படுத்தலை மீறி Grenchen என்ற இடத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அதன் காரணமாக, ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார், 280 பேர் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

தனிமைப்படுத்தலை மீறியதற்காகவும், ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட காரணமாக இருந்ததற்காகவும், Camillaவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறுகிறார் Camilla.

இருந்தாலும், விதிப்படி, அவர் எழுத்துப்பூர்வமான உறுதிபடுத்தலுக்காக காத்திருந்திருக்கவேண்டும்.

ஆகவே, விதிகளை மீறியதற்காக Camillaவுக்கு 1,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற செலவுகளுக்காக 400 ஃப்ராங்குகள் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்