இனி இறப்பவர்களை என்ன செய்யப் போகிறோம் என தெரியவில்லை: சுவிஸில் எழும் அழுகுரல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
665Shares

சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மண்டலத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக பாதித்துள்ள நிலையில், அதிகரிக்கும் இறப்பு தொடர்பில் கவலை எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 54 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பல்வேறு நாடுகள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைக்கு திரும்பியுள்ளது.

இருப்பினும், இறப்பு எண்ணிக்கையும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளன.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மண்டலத்தில் கொரோனாவால் இனி மேல் இறப்பவர்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆறு வாரங்களில் மட்டும் முந்தைய ஆறு மாதங்களை விட வலாய்ஸ் மண்டலத்தில் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

மட்டுமின்றி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வலாய்ஸ் மண்டலத்தில் 59 பேர் கொரோனா பெருந்தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலை தற்போது வலாய்ஸ் மண்டலத்தில் இறுதிச்சடங்கு முன்னெடுப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பலரது இறுதிச்சடங்குகளும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மட்டுமின்றி, இனி இதே நிலை நீடித்தால், இறப்பவர்களை என்ன செய்யப் போகிறோம் என தெரியவில்லை என்கிறார்கள் இறுதிச்சடங்கு முன்னெடுக்கும் அமைப்பினர்.

இது இவ்வாறிருக்க, இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ளும் உறவினர்களுக்கும் வலாய்ஸ் மண்டலத்தில் கட்டுப்பாடு உள்ளது.

சுவிஸின் எஞ்சிய மண்டலங்களில் ஒரு இறுதிச்சடங்கில் 50 உறவினர்கள் கலந்து கொள்ளலாம் என்ற விதி அமுலில் இருக்கையில், வலாய்ஸ் மண்டலத்தில் மட்டும் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனால், நிகழ்வுகளை காணொளியாக பதிவு செய்யவோ, இணையத்தில் ஒளிபரப்பவோ உறவினர்கள் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனிடையே வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தகவலில் சுவிட்சர்லாந்தில் புதிதாக 6739 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

24 மணி நேரத்தில் 97 பேர் மரணமடைந்துள்ளதுடன், 262 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்