சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்புக்குழு செய்திகளை மாற்றி மாற்றிக் கூறி நாட்டு மக்களை குழப்பிவிட்டது.
வார இறுதியில் பெடரல் கொரோனா தடுப்புக்குழு மக்களுக்கு அளித்த செய்திகள் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தின.
சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கொரோனா தடுப்புக்குழு உறுப்பினர்கள், உடனடியாக மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அழைப்பு விடுத்தார்கள்.
ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும், குழுவின் சில உறுப்பினர்கள், கொரோனா பரவல் வீதம் வேகமாக குறையவில்லை என்றால் அப்படி ஒரு முடிவை எடுப்பதற்கான தேவை ஏற்படும் என்று கூறினார்கள்.
இப்படி குழப்பமான தகவல்களை வெளியிட்டு கொரோனா தடுப்புக்குழு மக்களைக் குழப்பியதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்புக்குழுவின் தலைவரான Martin Ackermann, மீண்டும் நேற்று ஊடகவியலாளர்கள் முன் விளக்கமளிக்கவேண்டியதாயிற்று.
அவர், தாங்கள் ஆலோசனைகளை மட்டுமே அளிப்பதாகவும், அரசியல்வாதிகள்தான் முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார்.
இதற்கிடையில், மேலதிக கட்டுப்பாடுகள் எதையும் விதிப்பதற்கு எதுவும் இப்போதைக்கு திட்டமிடப்படவில்லை என சுவிஸ் பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.