சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட ஒரு ராட்சத கேக் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள Zug என்ற நகரத்தில் தயாரிக்கப்படும் Zuger Kirschtorte எனப்படும் கேக் சுவிட்சர்லாந்தில் மிக பிரபலமானது.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக ஒரு ராட்சத Zug செர்ரி கேக்கை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
18 கிலோ வெண்ணெய், 23 கிலோ மாவு 900 முட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட அந்த பிரமாண்ட கேக் மீது செர்ரிப்பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட 100 லிற்றர் செர்ரி மதுபானமும் ஊற்றப்பட்டது.
முடிவில், நான்கு மீற்றர் நீளமும் 241 கிலோ எடையுமுள்ள அந்த கேக், உலகிலேயே பெரிய Zug செர்ரி கேக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டது.
இந்த கின்னஸ் சாதனையைக் காண ஏராளமானோர் கூடிய நிலையில், 3,000 பேருக்கு அந்த கேக் பகிர்ந்துகொடுக்கப்பட்டது.