சுவிஸ் முதியோர் காப்பகங்களில் அதிகரிக்கும் பாதிப்பு: கவலையில் நிர்வாகிகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மண்டலத்தில் 8 முதியோர் காப்பகங்களில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பு கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த 8 காப்பகங்களில் இதுவரை 90 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி காப்பக ஊழியர்கள் 60 பேர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சிலபேர்களுக்கு கொரோனா அறிகுறிகளே இல்லை என கூறப்படுகிறது. குறித்த தகவலை மண்டலத்தின் சுகாதார இயக்குனரும் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளார்.

வலாய்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளமை கவலை அளிப்பதாக நிர்வாகிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதன் தோற்றம் தொடர்பில் கண்டறியவும் நிர்வாகிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மண்டலத்தில் சிறு உணவகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும், காப்பகங்களில் வெளி ஆட்களை அனுமதிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

வலாய்ஸ் மண்டலத்தில் செயல்பட்டுவரும் முதியோர் காப்பகங்களை பொறுத்தமட்டில், மே மாதம் 25 முதல் அக்டோபர் 8 ஆம் திகதி வரை எவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்