ஐரோப்பிய கண்டத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய சுவிஸ் மாகாணம்! எப்படி? வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், ஒரு இசை நிகழ்ச்சியால் ஒரு மாகாணமே ஐரோப்பிய கண்டனத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதாக நம்பப்படுகிறது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, Schwyz-ன் மாகாணத்தின் கிராமப்புற பகுதியில் செப்டம்பர் இறுதியில் நடந்த yodel இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதில், சுமார் 600 பேர் கலந்துகொண்டனர், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், ஆனால் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படவில்லை.

இந்நிகழ்ச்சிக்கு பின் ஒன்பது நாட்களுக்குப் பிறகு குழுவில் இருந்து பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்று நிகழ்வு அமைப்பாளர் பீட் ஹெக்னர் தெரிவித்தார்.

1,230-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளுடன், Schwyz-ன் மாகாணம் இப்போது ஐரோப்பிய கண்டத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாகும்.

Schwyz-ல் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஐரோப்பாவிலே மிக மோசமான ஒன்றாகும் என்று உள்ளூர் மருத்துவமனைத் தலைவர் ரெட்டோ நியூஷெக் தெரிவித்தார்.

Schwyz மாகாணத்தில் புதன்கிழமை, சுமார் 94 பேருக்கு கொரோனா உறுதியானது, இது முந்தைய நாளை விட இரண்டு மடங்கு மற்றும் வியாழக்கிழமை 114 பேருக்கு கொரோனா உறுதியானது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்