சுவிட்சர்லாந்தில் அரசு கடும் எச்சரிக்கை! கொரோனா பரவலை சரியாக கட்டுப்படுத்தாத மாகாணங்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா பரவலை சரியான முடிவெடுத்து கட்டுப்படுத்தாத சுவிஸ் மாகாணங்கள், பெடரல் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

உங்கள் பகுதியில் கொரோனா பரவலை நீங்கள் கட்டுப்படுத்துங்கள், இல்லையென்றால் உங்கள் மாகாணத்தை அரசு கட்டுப்படுத்தும் என்ற எச்சரிக்கை சுவிஸ் மாகாணங்களுக்கு விடுக்கப்படுள்ளது.

தலைநகர் பெர்னில் நடந்த மாகாண தலைவர்கள் சந்திப்பு ஒன்றில், சுவிஸ் ஜனாதிபதியாக தற்போது பொறுப்பு வகிக்கும் சிமோனெற்றா சொம்மாருகா இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அந்த கூட்டத்தில், சுவிட்சர்லாந்தில் புதிதாக 2,613 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளகியுள்ளதாகவும், 41 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பெடரல் சுகாதார அலுவலகம் தெரிவித்தது.

மாகாணங்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த சொம்மாருகா, பல மாகாணங்கள் நடவடிக்கை எடுப்பதில் மிகவும் தாமதமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஜனாதிபதியின் எச்சரிக்கை வேலை செய்யத்தொடங்கிவிட்டது போல இருக்கிறது, காரணம், அனைத்து மாகாண சுகாதாரத்துறை இயக்குநர்களும் இன்று கூட்டம் ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்