சுவிட்சர்லாந்தின் நலனுக்கே முன்னுரிமை: இளம்பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உளவியல் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண் ஒருவர் சக நோயாளிகள் இருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக, அவரை நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த, கொசோவோ நாட்டை பூர்வீகமாக கொண்ட 21 வயது யுவதியையே தற்போது 10 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உளவியல் சிகிச்சையில் இருந்து வந்த இவர், சக பெண் நோயாளி ஒருவரையும், 12 வயது சிறுவன் ஒருவரையும் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரு காரணங்களால் இவரை வேறு காப்பகங்களுக்கு மாற்றும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு, நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொலை முயற்சிக்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர், பாடசாலையிலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பல முறை உளவியல் ஆலோசனை தேடியுள்ளதுடன், சிகிச்சையிலும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் Bülach சிறார் நீதிமன்றம், இவர் குற்றவாளி என கண்டறிந்தது.

இதனையடுத்து குறித்த இளம்பெண்ணிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அத்துடன் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் தங்கவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த அவர், நாட்டிலிருந்து வெளியேற்றப்படுதல் காலகட்டத்தை 5 ஆண்டுகளாக குறைக்கவும் கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் வியாழனன்று தீர்ப்பு வழங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை என குறைத்த நீதிமன்றம், சுவிட்சர்லாந்தின் நலன் கருதி, நாட்டைவிட்டு வெளியேறும் காலகட்டத்தை 10 ஆண்டுகள் என உறுதி செய்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்