மக்கள் வீடுகளிலிருப்பதால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினை: கவலை வேண்டாம் என்கிறது அரசு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இந்த கொரோனா வந்தாலும் வந்தது, என்னென்னவோ எதிர்பார்க்காத பிரச்சினைகளையெல்லாம் குறித்து மக்கள் கவலைப்படும் ஒரு சூழல் உலகம் முழுவதும் ஏற்பட்டுவிட்டது.

அதில், சுவிட்சர்லாந்தில் இரு வித்தியாசமான பிரச்சினை! அதாவது இந்த ஊரடங்கு போன்ற விடயங்களால் மக்கள் வீடுகளில் தங்கும் நேரம் அதிகரிக்க, மக்கள் வீடுகளில் சமைப்பதும் அதிகரித்துவிட்டது.

ஆக, அப்படி சமைத்ததில் உள் நாட்டில் தயாரித்த வெண்ணெயை விட, மக்கள் சமைத்த வெண்ணெயின் அளவு அதிகமாகிவிட்டது.

ஆகையால், கிறிஸ்துமஸ் நேரத்தில் வெண்ணெய் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற பயமும் மக்களுக்கு வந்துவிட்டது.

ஆகவே, அரசு ஒரு 500 டன் வெண்ணெயை பயன்பாட்டுக்கு இறக்கியுள்ளது. எனவே, மக்கள் வெண்ணெய் கிடைக்குமா கிடைக்காதா என இனி கவலைப்படவேண்டாம்!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்