சுவிட்சர்லாந்தில் கொரோனா இரு மடங்காக அதிகரிப்பு! அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புதிய தினசரி கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை புதன்கிழமை 2,823 ஆக உயர்ந்தது என பொது சுகாதாரத்திற்கான மத்திய அரசு அலுவலகம் (FOPH) தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை செவ்வாயன்று பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்காகும் என்று FOPH குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புதன்கிழமை சுவிஸில் கொரோனாவால் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 57 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என FOPH தகவல் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில தற்போது வரை மொத்தம் 68,704 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளன.

கொரோனா நோயுடன் தொடர்புடைய மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,816 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மொத்தம் 5,167 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனில் மொத்தம் 15,36,725 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில், சோதனை மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 9.9% பேருக்கு கொரோனா உறுதியானது.

5,250 பேர் தனிமையில் இருப்பதாகவும், தொடர்பு தடமறிதல் காரணமாக புதன்கிழமை 11,093 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர் என FOPH தெரிவித்துள்ளது.

கூடுதலாக, ஆபத்து நாடுகளில் இருந்து திரும்பி வந்த 14,664 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.

இந்நிலையில், முகக் கவசம் அணிவது, பொது அல்லது தனியார் கூட்டங்களின் எண்ணிக்கையை சோதனை செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் உட்பட நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து வியாழக்கிழமை அரசாங்கம் மாகாண சுகாதார இயக்குநர்களை சந்தித்து விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்