ஒரே முதியோர் இல்லத்தில் 20 பேர் உயிரிழப்பு: ஊழியர்கள் மூவர் மீது கொலை வழக்கு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஒரே முதியோர் இல்லத்தில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் ஊழியர்கள் மூன்று பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

கவனக்குறைவால் உயிரிழக்க காரணமாக இருத்தல் மற்றும் சுவிஸ் தொற்று நோய் சட்டத்தை மீறியதற்காக அந்த இல்ல நிர்வாகிகள் மூவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அந்த மூவர், அந்த இல்லத்தின் பொது இயக்குநர், சுகாதார இயக்குநர் மற்றும் இல்ல ஊழியர் ஒருவர் ஆவர்.

நேற்று மாலை அந்த மூவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒரு முதியவரின் உறவினரின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை அதிக அளவு கொரோனா மரணங்கள் டிசினோ மாகாணத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றிலும், பாதிக்கும் மேல் முதியோர் இல்லங்களில் நிகழ்ந்த மரணங்கள்.

நாட்டின் மக்கள்தொகையில் வெறும் நான்கு சதவிகிதம் பேர் மட்டுமே டிசினோ மாகாணத்தில் வாழும் நிலையில், சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ள மொத்த கொரோனா மரணங்களில் 17 சதவிகிதம் டிசினோவில்தான் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்