வெளிநாட்டில் கொல்லப்பட்ட சுவிஸ் குடிமகள் இவர் தான்: உயிருடன் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
307Shares

மாலியில் கொல்லப்பட்ட சுவிஸ் குடிமகளின் புகைப்படமும், அவர் உயிருடனிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளன.

2016இல் மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான தொண்டு நிறுவன ஊழியர் Sophie Petronin (75) கடந்த வெள்ளியன்று திடீரென்று விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட Sophie, சுவிஸ் நாட்டவரான Beatrice Stoeckli என்னும் சுவிஸ் குடிமகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பேஸலைச் சேர்ந்த Beatrice மாலியில் ஒரு மிஷனெரியாக பணியாற்றிவந்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி ஆயுதம் தாங்கிய சிலர் அவரை கடத்திச் சென்றனர்.

பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் உயிருடனிருக்கும் வீடியோ ஒன்றை தீவிரவாதிகள் வெளியிட்டனர். அந்த வீடியோவில், கருப்பு முக்காடிட்டிருந்த Beatrice, தன்னை மீட்க சுவிஸ் அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துகொண்டார்.

தற்போது தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவரான Sophie, ஒரு மாதத்திற்கு முன்பே Beatrice கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சுவிட்சர்லாந்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis தான் Beatriceஇன் மரணம் குறித்து கேள்விப்பட்டதையடுத்து கடும் சோகமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோவை காண

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்