சுவிட்சர்லாந்தில் லூசர்ன் ஏரி நிர்வாகம் முக்கிய முடிவு: அடுத்த ஆண்டும் தொடரும் என அறிவிப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புவது இன்னும் காலதாமதமாகும் என்பதால் லூசர்ன் ஏரியில் படகு போக்குவரத்து தொடர்பில் நிர்வாகம் முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

கொரோனா பரவலால் சுவிஸ் உட்பட உலகின் மொத்த நாடுகளிலும் பொதுமக்கள் புழங்க கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

இதனால் சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓராண்டு காலம் ஆகலாம் என்பதால், லூசர்ன் ஏரியில் படகு சவாரியை 20 சதவீதம் அளவுக்கு குறைக்க முடிவு செய்துள்ளதாக படகு போக்குவரத்து நிர்வாகம் புதனன்று அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் லூசர்ன் படகு போக்குவரத்து நிர்வாகம் மூன்று மாதம் செயல்பாட்டை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது.

மேலும், தற்போது வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பொதுவெளியில் மாஸ்க் கட்டாயம் என்பதால் படகு சவாரிக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிவை எதிர்கொண்டுள்ளது.

இதனால் சுமார் 15 மில்லியன் பிராங்குகளின் வருவாய் இழப்பை லூசர்ன் படகு போக்குவரத்து நிர்வாகம் எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் முக்கிய தடங்களுக்கான சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் லூசர்ன் முதல் Flüelen UR வரையான சேவை மட்டுமே லாபகரமாக செயல்பட்டு வருவதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி படகு போக்குவரத்தை முன்னெடுத்து நடத்துவது என்பது பொருளாதார இழப்பையே ஏற்படுத்தும் எனவும் லூசர்ன் படகு போக்குவரத்து நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்