அழகான சவப்பெட்டியின் மூடி மீது ஆசை வைத்த இறுதிச்சடங்கு மைய அலுவலர் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இறுதிச்சடங்கு மைய அலுவலர் ஒருவர் தகனத்துக்காக வந்த சவப்பெட்டிகள் இரண்டின் மூடிகள் அழகாக இருப்பதைக் கவனித்துள்ளார்.

ஆகவே, அவற்றைத் தன் வீட்டு ஜன்னலில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு மூடிகளை எடுத்துக்கொண்டுள்ளார் அவர்.

அத்துடன், சவப்பெட்டிகள் இரண்டையும் திறந்து வைத்தே தகனம் செய்ய முயன்றபோது சிக்கியுள்ளார் அவர்.

மேலை நாடுகளில் இறந்த உடல்களை அவமதிப்பது குற்றச்செயலாகும். ஆகவே, இறந்தவர்களின் அமைதியைக் குலைத்த குற்றத்திற்காக அவருக்கு 6,300 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்