குட்டைப்பாவாடையும் தொப்புள் தெரியும் உடையும் அணியும் மாணவிகளுக்கு வித்தியாசமான தண்டனை! எங்கு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் பள்ளி ஒன்றில் குட்டைப்பாவாடையும் தொப்புள் தெரியும் விதத்தில் சட்டையும் அணியும் மாணவிகளுக்கும், குட்டையான ஷார்ட்ஸ் அணியும் மாணவர்களுக்கும் வித்தியாசமான தண்டனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் உடல் தெரியும் வகையில் உடை அணியும் மாணவிகளுக்காக வெட்கச் சட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முழங்கால் அளவு நீளமுள்ள அந்த சட்டையில், ‘நான் முறையாக உடை அணிந்திருக்கிறேன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையில் மாணவர்களைவிட மாணவிகள்தான் அதிகம் சிக்கியிருக்கிறார்கள், இதுவரை இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பத்து மாணவிகள் இந்த வித்தியாசமான தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள்.

இந்த தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவ மாணவியர், அதை மாற்றவேண்டும் என குரல் கொடுத்துவருகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்