தவறுதலாக பண்ணைக்கு சென்றுவிட்ட ட்ராம்... வேலைக்கு செல்ல முடியாமல் சிக்கிக்கொண்ட பயணிகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லாசேனில் ஒரு ட்ராம் தடம் புரண்டதால் பணிக்கு செல்லவேண்டிய பயணிகள் வழியிலேயே சிக்கிக்கொண்டார்கள். அந்த ட்ராமுக்கு ஒரு மாற்று ட்ராம் அனுப்பப்பட்டது.

ஆனால், பழுதான ட்ராம் நிற்கும் இடம் மற்ற ட்ராம் சாரதிகளுக்கு சரியாக தெரியாததால் வேறெங்கோ சென்றுவிட்டார்கள்.

அதை விட வேடிக்கை, ஒரு ட்ராம் தவறுதலாக பண்ணை ஒன்றிற்கு சென்றுவிட்டது. பின்னர் அது திரும்பி சரியான இடத்தை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது.

இதனால், அலுவலகத்திற்கு செல்லவேண்டியவர்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.

ட்ராம் நிறுவனம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலும், தவறுவது மனித இயல்புதானே என்றும் கூறியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்