சுவிஸில் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளம் வயது மகள்: வழக்கில் முக்கிய திருப்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் குடும்ப தகராறில் 18 வயது மகளே தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது குறித்த இளம் பெண் பொலிசாரால் கைதாகியுள்ள நிலையில், விசாரணையை கொலை வழக்காக முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சூரிச் மண்டலத்தின் மாவட்டம் 2-ல் வியாழக்கிழமை பகல் 7 மணியளவில் பொலிசாருக்கு குடும்ப தகராறு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடும் 47 வயது நபரை மீட்டுள்ளனர்.

ஆனால் உரிய முதலுதவி அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும், சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 18 மற்றும் 50 வயதுடைய இரு பெண்கள் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையிலேயே தந்தையை துப்பாக்கியால் சுட்டது தாம் என 18 வயதான மகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிசார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்