பள்ளி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ மாணவியர் 15 பேருக்கு கொரோனா: கோபத்தில் பெற்றோர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பள்ளி ஒன்று மாணவ மாணவிகளை முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளதையடுத்து, அவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர் கோபமடைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் லாசேனிலுள்ள பள்ளி ஒன்று தனது மாணவ மாணவியரை மலை ஒன்றிற்கு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

முகாமுக்கு சென்ற மாணவ மாணவிகள், அங்குள்ள சூழல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் வகையில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு படுக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தூங்க நேர்ந்ததோடு, ஒரே அறையிலுள்ள ஒரு மெத்தையில் பலர் படுத்துத் தூங்கியதாகவும், தண்ணீர் போத்தல்களை பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் 15 முதல் 16 வயதுடையவர்கள் ஆவர். இந்த நேரத்தில் மாணவ மாணவிகளை முகாமுக்கு அழைத்துச் செல்ல பள்ளி எடுத்த முடிவு பொறுப்பற்ற செயல் என கொரோனா தாக்கிய மாணவி ஒருவரின் தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்