வங்கியில் ஒரு மில்லியன் டொலர் கையாடிய பெண்... வீட்டுக்கு போக அனுமதித்த நீதிமன்றம்: ஒரு வேடிக்கை செய்தி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வங்கியில் ஒரு மில்லியன் டொலர் வரை கையாடல் செய்த பெண்ணை, வீட்டுக்கு போகலாம் என நீதிமன்றம் அனுப்பிய ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது.

ஜெனீவா வங்கி ஒன்றில் கணக்கராக பணியாற்றிய பெண் ஒருவர், போலி ஆவணங்கள் மூலம் ஒரு வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து 10 ஃப்ராங்குகள் முதல் 20,000 ஃப்ராங்குகள் வரை, மாதம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கையாடல் செய்திருக்கிறார். இதற்காக அவர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டதும் அந்த பெண் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

காரணம் என்னவென்றால், வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னரே அவர் ஒரு ஆண்டு சிறையில் இருந்துவிட்டதால், அவரை வீட்டுக்குச் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

என்றாலும், மேலும் இரண்டாண்டுகள் வரை அவர் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுவார்.

அந்த காலகட்டத்தில் அவர் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால், அவர் மீண்டும் சிறை செல்ல நேரிடும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்