அந்த துயரத்தில் இருந்து மீள முடியவில்லை: சுவிஸில் அடித்துக் கொல்லப்பட்ட தாயார் தொடர்பில் மகனின் கண்ணீர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் அடித்துக் கொல்லப்பட்ட தாயார் தொடர்பில் அவரது பிள்ளைகள் மூவர் தங்களின் நிலை குறித்து முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் கடந்த புதன் அன்று குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்த 22 வயது இளைஞர் உலோக பாத்திரம் ஒன்றால் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் 46 வயதான தாயார் ஒருவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், குறித்த இளைஞருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடியவே, வேறு வழியின்றி பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதனிடையே, படுகாயமடைந்த அந்த தாயாரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்தும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இச்சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரும், மரணமடைந்த தாயாரும் எந்த அறிமுகமும் இல்லாதவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.

மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெரியாத நிலையில், அந்த இளைஞரின் உளவியல் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே, இத்தாலியரான அந்த தாயாரை அவரது சொந்த கிராமத்திலேயே நல்லடக்கம் செய்துள்ளதாக அவரது பிள்ளைகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில், தாயாரின் இழப்பும், அது தொடர்பான செலவுகளும் தங்களுக்கு தாங்க முடியாத அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தங்களது தாயார் கடந்த நான்கு ஆண்டுகளாகவே சுவிட்சர்லாந்தில் குடியிருந்து வருவதாகவும், St. Gallen மண்டலத்தில் பணியாற்றி வந்ததாகவும் 30 வயதான மகன் தெரிவித்துள்ளார்.

தாயாரின் இழப்பு மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளதாகவும், இந்த துயரத்தில் இருந்து மீள்வது கடினம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்