அடுத்த ஆண்டு மார்ச் வரை நடை பாதையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்?: கொரோனா படுத்தும் பாடு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இந்த கொரோனா வந்தாலும் வந்தது, மக்களை ஆட்டித்தான் படைக்கிறது. கட்டுப்பாடுகள்... கட்டுப்பாடுகள் என தொடர்ந்து கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் லாசேனில் 2021 மார்ச் வரை உணவகங்களுக்கு செல்வோர் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக நடை பாதையிலும், பார்க்கிங் செய்யும் இடங்களிலும் அமர்ந்து உட்கார அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் கொரோனா பரவாமல் தடுக்கத்தான், கொரோனாவும் பரவக்கூடாது, உணவகங்களில் வருவாயும் வரவேண்டும், வாடிக்கையாளர் தேவையும் சந்திக்கப்படவேண்டும் என்றால் வேறு என்ன செய்வது?

இப்படி செய்தாலாவது ஓரளவுக்காவது உணவகங்களுக்கு நல்ல வருவாய் வரும் என்பதால் இந்த ஏற்பாடு.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்