சுவிஸில் சீஸ் சாப்பிட்டு பறிபோன 10 உயிர்கள்: குற்றவியல் நடவடிக்கை முன்னெடுப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
512Shares

சுவிட்சர்லாந்தில் சீஸ் சாப்பிட்டு 34 பேர் நோய்வாய்ப்பட்டு, அதில் 10 பேர் மரணமடைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Schwyz மண்டலத்தில் செயல்பட்டுவரும் ஒரு நிறுவனம் மீதே குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்பட்ட சீஸில், உடலுக்கு தீங்கான லிஸ்டேரியா என்ற தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மூடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் விற்பனைக்கு வைத்த ஒருவகை சீஸ் சாப்பிட்டு 34 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

கடந்த 2018 முதல் 2020 வரையான காலகட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மே மாதத்தில் நடந்த பரிசோதனையின்போது லிஸ்டீரியா அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து குறித்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை பாதிக்கப்பட்ட பொருட்களை விற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்