இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை சுவிஸ் அரசு நிறுத்தக்கோரி அறவழி ஒன்று கூடல்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் அரசு நிறுத்தக்கோரி பேர்ன் வைசன் ஹவுஸ் பிளற்ஸ் திடலில் அறவழி ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பினை தொடர்ந்து சுவிஸ் நடுவனரசிற்கான மனு பேர்ன் பாராளுமன்றத்தில் கையளிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள் 31. 08. 2020 பிற்பகல் 14.00 முதல் 15.00 மணிவரை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈழத்தமிழர்களது புகலிட கோரிக்கையினை அறவழியில் பெறுவதற்கு வலுச்சேர்க்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்