இளைஞனை கட்டி வைத்து மயக்கநிலையில் 13 நாட்கள் வைத்திருந்த மருத்துவர்கள்: நீதிமன்றம் அதிரடி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞனை சட்டத்திற்கு புறம்பாக 13 நாட்கள் கட்டி மயக்க நிலையில் வைத்திருந்த மருத்துவர்கள் மூவர் சிறை செல்ல இருக்கிறார்கள்.

மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அதிகபட்சம் சில மணி நேரம் வரைதான் மயக்கமருந்தின் கட்டுப்பாட்டில் வைக்க அனுமதி உள்ளது.

ஆனால், அந்த மருத்துவர்கள் இளைஞர் ஒருவரை 13 நாட்கள் மயக்க நிலையில் வைத்திருந்துள்ளனர்.

அப்போது 15 வயதாக இருந்த அந்த இளைஞர் சூரிச் அருகிலுள்ள Burghölzli மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மற்றொரு இளைஞரை கத்தியால் குத்திவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்றதால் நீதிமன்றம் அவரை மன நல மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தது.

அப்படிப்பட்ட நிலையில் விதிகளுக்கு மாறாக அந்த இளைஞர் 13 நாட்கள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், அந்த மருத்துவர்களை 14 மாதங்கள் சிறையிலடைக்க அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

தற்போது 24 அவயது ஆகும் நிலையிலும், இன்னும் அந்த இளைஞர் மன நல காப்பகத்தில் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்