மாஸ்க் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்ட பயணிகள்: ஒரு வித்தியாசமான தகவல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
462Shares

சுவிட்சர்லாந்தில், ஒரு பக்கம் அரசு பொது போக்குவரத்தில் மாஸ்க் அணிய வற்புறுத்துகிறது.

மறுபக்கம் மாஸ்க் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவிகிதம் மக்கள் மாஸ்க் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மாஸ்க் அணிந்தவர்களை ஏதோ வேற்றுக் கிரகத்தவர்கள் போல் பார்ப்பது, நக்கலாக சிரிப்பது ஆகியவையும் நடக்கிறதாம்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஸ்டீவ் என்பவர் கூறும்போது, மாஸ்க் அணிந்த தன்னை பொறுப்பற்றவன் என மக்கள் திட்டியதாக தெரிவிக்கிறார்.

சிலர் முறைக்கிறார்கள், வேறு சிலர் மாஸ்க் அணிந்ததற்காக எனக்கு பாடம் எடுக்கிறார்கள் என்கிறார் அவர்.

ஸ்டீவ் மட்டுமல்ல, வேறு பலரும் மாஸ்க் அணிந்ததற்காக தங்களை மற்றவர்கள் திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்