இவர்களுக்கும் கொரோனாவால் அதிக ஆபத்து: சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

யாரையெல்லாம் கொரோனா எளிதில் தாக்கும் என சுவிட்சர்லாந்து அற்வித்திருந்த பட்டியலில், தற்போது கர்ப்பிணிகளையும் சேர்த்துள்ளனர் சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

சுவிஸ் பொது சுகாதாரத்துறை கர்ப்பிணிப்பெண்களும் கொரோனாவால் தாக்கப்படும் அதிக அபாயத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒரே வயதுடைய பெண்களில், கர்ப்பிணிகள், கர்ப்பிணிகள் அல்லாத பெண்களை விட கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அதிக அபாயத்திலிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கு மற்றவர்களை விட 1.5 முதல் 5 மடங்கு அதிக அபாயம் இருப்பதாகவும், அத்துடன், அவர்களது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் அபாயம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொப்புள் கொடியையும் தாக்கும் என்பதால், கருவிலிருக்கும் குழந்தைக்கு உணவு சரியாக செல்லாமல் அது பாதிக்கப்படுவதோடு, குழந்தையும் கொரோனா தொற்றுடன் பிறந்தால் அதற்கும் ஆபத்துதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கர்ப்பிணிகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், இரத்தம் உறையாமை போன்ற பக்க விளைவுகள் காணப்படுவதுடன், பொதுவாகவே அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும் என்பதால் அவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ய்புகள் அதிகம் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்