போர் நடந்தது போன்ற நிலைமை: பெய்ரூட் வெடிவிபத்து குறித்து சுவிஸ் பெண்ணின் நேரடி அனுபவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 137 பேர் பலியாக காரணமான சக்திவாய்ந்த வெடிவிபத்துக்கு பின்னர் போர் நடந்தது போன்ற நிலைமை காணப்படுவதாக அங்கு வசிக்கும் சுவிஸ் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என கூறும் 26 வயது Souraya Khaled, இப்படி பாழடைந்த நகரத்தைப் பார்ப்பது இதயத்தை உடைக்கிறது என்கிறார்.

சுவிட்சர்லாந்தின் பேதன் பகுதியை சேர்ந்த காலித், கடந்த 10 ஆண்டுகளாக பெய்ரூட்டில் வசித்து வருகிறார்.

விபத்து நடந்த நேரத்தில், அவர் தனது கணவருடனும் அவரது பெற்றோருடன் துறைமுகத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் தங்கியிருந்தார்.

தமது அனுபவத்தை குறிப்பிட்ட காலித், செவ்வாய் அன்று மாலை முதல் வெடிவிபத்தை நாங்கள் உணர்ந்தோம். முதலில் ஒரு பூகம்பம் என்று தான் நாங்கள் நினைத்தோம், ஏனெனில் முழு குடியிருப்பும் அதிர்ந்தது.

உடனே நாங்கள் பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க ஓடினோம். ஆனால் சில நிமிடங்களில் இரண்டாவது, பெரிய வெடிவிபத்தை நாங்கள் உணர்ந்தோம்.

அதன் அதிர்வு அலை பயங்கரமானது, ஆனால் கடவுளுக்கு நன்றி ஜன்னல்கள் மட்டுமே உடைந்தன என்கிறார் காலித்.

நான் ஒருபோதும் இவ்வளவு பயப்படவில்லை. 2006 ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் போர் நடந்தபோது கூட இதுபோன்ற எதையும் நான் அனுபவித்ததில்லை என கூறும் காலித்,

தற்போது இரண்டு வார காலத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவது என்பது கொஞ்ச நாட்களுக்கு கேள்விக்குறி தான் என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்