வரும் சனிக்கிழமை முதல் இந்த நாட்டவர்களுக்கும் சுவிட்சர்லாந்தில் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வரும் சனிக்கிழமையிலிருந்து ஸ்பெயினிலிருந்து சுவிட்சர்லாந்து வருபவர்களும் தங்களை பத்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை முடிவுடன் வருவோருக்கும் தனிமைப்படுத்தல் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஸ்பெயினுக்கு சொந்தமான கானரி மற்றும் பாலியாரிக் தீவுகளிலிருந்து வருவோருக்கு மட்டும் தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் நாடுகளில் ஸ்பெயின் 11ஆவது இடத்தைப் பிடிக்கிறது.

சென்ற ஆண்டு மட்டும் 1.82 மில்லியன் சுவிஸ் குடிமக்கள் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

ஸ்பெயினிலிருந்து வருவோருக்கு நார்வே முதல் பிரித்தானியா வரை பல நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், அந்த நாடுகளின் பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்தும் சேர்ந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்