சுவிட்சர்லாந்தில் இளம் தொழிலதிபர்கள் மீது தாக்குதல்: மாஸ்க் விற்பனையால் வந்த வினை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸில் மாஸ்க் விற்பனை செய்து பெரும் செல்வந்தரான இரு தொழிலதிபர்களின் தங்கும் இல்லத்தின் மீது பொதுமக்களில் சிலர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு இலக்கான இல்லமானது அந்த தொழிலதிபர்களுடையது இல்லை என்ற தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, குறித்த இளம் தொழிலதிபர்கள் இருவரும், கொரோனா பெருந்தொற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, திடீர் செல்வந்தர்கள் ஆனதே.

இவர்களின் நிறுவனமானது சீனாவில் இருந்து பல்வேறு வகையான மாஸ்குகளை இறக்குமதி செய்து, அதை சுவிஸ் முழுவதும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தாக்குதலை முன்னெடுத்தவர்களின் குற்றச்சாட்டு.

மட்டுமின்றி இந்த குறுகிய காலகட்டத்தில், மாஸ்க் மட்டும் விற்பனை செய்துள்ளது மூலம் இருவரும் ஆளுக்கு 250,000 பிராங்குகள் விலை கொண்ட Bentley கார் சொந்தமாக்க தொகை செலுத்தியுள்ளதாகவும்,

கூடவே 2.5 மில்லியன் பிராங்குகள் செலுத்தி Ferrari கார் ஒன்றையும் பதிவு செய்துள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

கொரோனாவை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுவது முறையா என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள்,

கொரோனா மாஸ்குகளை விற்று பொதுமக்கள் பலரின் துன்பங்களை வெட்கமின்றி சுரண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சூரிச் நகர பொலிசார் தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்