வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் நபர்களுக்கு சூரிச் விமான நிலையத்தில் கொரோனா டெஸ்ட் கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து சூரிச் விமானநிலையத்தில் வந்திறங்கும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பது கட்டாயமாக்கப்படலாம் என தெரிகிறது.
தற்போது வரை தாமாகவே முன்வரும் நபர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது, இதற்காக CHF180 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
முடிவுகள் நெகட்டிவாக இருப்பினும், கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா டெஸ்ட் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, முடிவுகள் நெகடிவ்வாக இருந்தால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஜேர்மனியில் தாய்நாடு திரும்பும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் இலவசமாக எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இதேவழியை பின்பற்ற வேண்டும் என சுவிட்சர்லாந்துக்கு அரசியல் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
முடிவுகள் நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில், தனிமைப்படுத்தல் காலத்திலிருந்து விலக்கு அளித்து விரைவாக அவர்கள் பணிக்கு திரும்ப இது வழிவகுக்கும் என FDP National Councillor Matthias Jauslin தெரிவித்துள்ளார்.
தற்போது வரை சூரிச் விமானநிலையத்தில் ஒருநாளைக்கு 30 லிருந்து 80 கொரோனா டெஸ்ட்கள் எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.