இரவு விடுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது எப்படி?: திணறும் சுவிஸ் அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள இரவு விடுதி ஒன்றில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு அந்த விடுதிக்கு சென்ற 300 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக 1.5 மீற்றர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்ற விதி அமுலில் இருக்கும் நிலையிலும், இரவு விடுதிகளில் அந்த விதியை பின்பற்றுவது எளிதான ஒரு விடயமல்ல.

அங்கு ஆட்டமும் பாட்டுமாக மக்கள் கூச்சலிடும் நிலையில், பரவும் எச்சில் துளிகளால் கொரோனா எளிதில் பரவ வாய்ப்புள்ளது.

தற்போதைக்கு மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதி நடைமுறையில் இல்லாத நிலையில், இரவு விடுதிகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

கொரோனா பரிசோதனை செய்வதும், கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ட்ரேஸ் செய்வதுமே இப்போதைக்கு சாத்தியமான ஒரே நடைமுறையாக உள்ளது. ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை.

சமீபத்தில் சூரிச் இரவு விடுதியில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டு பிடிப்பது பெரும் பிரச்சினையாக இருந்தது.

காரணம், இரவு விடுதிக்கு வந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் போலியான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தனர்.

அப்படி நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது கடினம் என்னும் பட்சத்தில், சுவிட்சர்லாந்தில் ஒரு இரண்டாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் பல நிபுணர்கள்.

எனவே, இனி இரவு விடுதிகளுக்கு செல்பவர்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கவேண்டும் என அரசியல்வாதிகள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அதேபோல், இரவு விடுதிகளுக்குள் நுழைபவர்களுக்கு வாசலிலேயே உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், அவர்களது அடையாள அட்டையின் நகலைப் பெறுதல்.

அப்படி தங்கள் வாடிக்கையாளர்களால் விதிகளுக்கு கட்டுப்பட முடியாது என்னும் சூழ்நிலை வரும்போது, இரவு விடுதியையே மூடுதல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றனர் அதிகாரிகள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்