ஈரான், இந்தியா மற்றும் பாகிஸ்தானிய ரகசியங்களை பல ஆண்டுகளாக வேவு பார்த்த சுவிஸ் இயந்திரங்கள்: ஒரு அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் நிறுவனம் ஒன்று தயாரித்த இயந்திரம் ஒன்றின் உதவியால் ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாட்டு ரகசியங்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நிறுவனமான Crypto AG, பனிப்போர் காலம் தொட்டு 2000ங்கள் வரை, முக்கிய ரகசியங்களை குறியீடுகளாக அனுப்ப உதவும் இயந்திரங்களை 120 நாட்டு அரசாங்கங்களுக்கு வழங்கியுள்ளது.

ஆனால், அந்த இயந்திரங்களை குடைந்து அவற்றிலுள்ள ரகசிய செய்திகளை உளவாளிகள் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் ரகசியங்கள் இப்படி திருடப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980களில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் 40 சதவிகித வெளிநாட்டு தகவல்கள், Crypto நிறுவனத்தின் இயந்திரங்கள் மூலம்தான் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன் மூலம் பல மில்லியன் டொலர்கள் லாபம் பார்த்த Crypto நிறுவனம், அந்த லாபத்தை CIA மற்றும் BND உடன் பகிர்ந்துகொண்டுள்ளது. CIA என்பது அமெரிக்க உளவுத்துறையையும், BND என்பது ஜேர்மன் உளவுத்துறையையும் குறிக்கும்.

தங்கள் ரகசியங்களை அறிந்துகொள்ளும் அமெரிக்காவுக்கும் மேற்கு ஜேர்மனிக்குமே, வெளிநாட்டு அரசாங்கங்கள் பணம் அள்ளிக்கொடுத்துள்ளன. ரஷ்யாவும் சீனாவும் மட்டும் இந்த இயந்திரங்களை ஒருபோதும் நம்பாததால் அவற்றை பயன்படுத்தவில்லை.

தற்போது தனக்கு எதுவுமே தெரியாதுபோல், விசாரணை ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாக சுவிட்சர்லாந்து அறிவிக்க, சுவிஸ் மக்களோ கோபத்தில் கொந்தளிக்கிறார்கள்.

ஏற்கனவே, கருப்புப் பணத்தை பதுக்கும் விவகாரத்தில் நாறிப்போயிருக்கும் தங்கள் நாட்டுக்கு இது இன்னொரு அவமானம் என அவர்கள் கருதுகிறார்கள்.

சுவிட்சர்லாந்து எப்போதுமே நடு நிலை நாடு என்று பெயர் பெற்றது, இப்போது அது போலி என உலகமே எண்ணும் ஒரு நிலை உருவாகிவிட்டதாக சுவிஸ் குடிமக்கள் கருதுகிறார்கள்.

GETTY IMAGES

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்