சுவிட்சர்லாந்திலும் கொரோனா வியாதி... தீவிர கண்காணிப்பில் இருவர்: வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

பிரான்ஸ், ஆஸ்திரியாவை அடுத்து சுவிட்சர்லாந்தில் உயிர் பறிக்கும் கொரோனா வியாதி பாதிக்கப்பட்டவர்கள் இருவரை புதிதாக அடையாளம் கண்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சூரிச் பகுதியில் அமைந்துள்ள Triemli மருத்துவமனையில் கொரோனா வியாதியின் அறிகுறிகளுடன் புதிதாக இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளதுடன், எஞ்சிய நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் சமீப நாட்களில் சீனாவில் தங்கியிருந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வியாதி பாதிப்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாக சுவிஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் எந்த மாகாணத்திலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கொரோனா அறிகுறிகளுடன் எவர் அடையாளம் காணப்பட்டாலும் 2 மணி நேரத்தில் பெடரல் அரசாங்கத்தை அறியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொடிய கொரோனா வியாதி தொடர்பில் சோதனை முடிவைப் பெற எட்டு மணி நேரம் ஆகும். தினசரி மூன்று முறை, காலை 10 மணி, 3 மணி மற்றும் இரவு 8 மணி என சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், திங்கள் முதல் அவசர உதவி இலக்கம் ஒன்றும் பொதுமக்களுக்காக அறிவிக்கப்படும் என சூரிச் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சுவிட்சர்லாந்தில் கொரோனா அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட 100 பேரில், மூன்று பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்