கருப்பின இளம்பெண்ணை ஒதுக்கிய பத்திரிகைகள்: டாவோசில் ஒரு இனவெறி சம்பவம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் டாவோசில் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் முதலான நால்வருடன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற கருப்பினப்பெண் ஒருவர், தான் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உகாண்டாவைச் சேர்ந்த Vanessa Nakate (23) என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரேட்டா தன்பெர்க் முதலான நான்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஆனால் பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று உட்பட, பல பத்திரிகைகள் அந்த படத்தை வெளியிட்டபோது அதில் கருப்பினப்பெண்ணான Vanessa இல்லை. அவர் இருந்த பகுதி வெட்டப்பட்டு மற்ற வெள்ளையின பெண்கள் இருக்கும் படம் மட்டுமே பத்திரிகைகளில் வெளியானது.

வாழ்க்கையில் முதல் முறையாக இனவெறி என்ற வார்த்தையின் பொருளை புரிந்துகொண்டுள்ளதாக கண்ணீருடன் தெரிவிக்கிறார் Vanessa.

ஆப்பிரிக்காதான் குறைந்த அளவு கார்பனை வெளியேற்றும் நாடு, ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதும் நாங்கள்தான் என்று கூறும் Vanessa, நீங்கள் எங்களை இருட்டடிப்பு செய்வதால் எதுவும் மாறிவிடாது என்று ஊடகங்களை குற்றம் சாட்டுகிறார்.

மிகவும் கொடூரமானது இந்த உலகம், இதற்கு மேல் என்ன சொல்வதென்று எனகு தெரியவில்லை என்கிறார் அவர்.

ஆனால், அந்த புகைப்படத்தின் பின்னணியில் ஒரு கட்டிடம் இருப்பதாகவும், அதை அகற்றி ஒரே மாதிரியான பின்னணியைக் கொடுப்பதற்காக எடிட் செய்யும்போது அந்த கருப்பினப்பெண்ணின் படம் தவறிவிட்டதாக விளக்கமளித்துள்ளது அந்த பிரபல பத்திரிகை!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்