நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை... ஒரு வித்தியாசமான திருடன்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஒரு நபர், தான் உண்மையில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஆயுதங்களுடன் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், ஜெனீவா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அந்த 26 வயது நபர், இரவு நேரங்களை வெளியில் சென்று மகிழ்ச்சியாக செலவிடுவதற்காக தனக்கு பணம் தேவைப்பட்டதென்றும், அதற்காகவே தான் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தார்.

ஜெனீவாவிலுள்ள Lancy என்ற இடத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் அவர் கொள்ளையடிக்கும்போது, ஒரு ஊழியர் காயமடைந்திருந்தார்.

சுவரில் பட்ட துப்பாக்கி குண்டு ஒன்று தெறித்து அவரைத் தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

ஆனால், யாரையும் காயப்படுத்தும் நோக்கம் தனக்கு கிடையாது என்று கூறிய அந்த கொள்ளையடித்த நபர், அச்சுறுத்துவதற்காக மட்டுமே தான் சுட்டதாக கூறியுள்ளார்.

சொல்லப்போனால், அந்த சம்பவத்திற்குப்பிறகு தான் உண்மையான துப்பாக்கிகளைக் கூட கொண்டு செல்லவில்லை என்றும், தான் வைத்திருந்தது போலித்துப்பாக்கி என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

தான் செய்த செயல்களை எண்ணி தான் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், அவர் மீதான விசாரணை தொடர்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்