துப்பாக்கி குண்டு சத்தத்தில் கண் விழித்த சுவிஸ் மக்கள்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் துப்பாக்கி சத்தம் கேட்டு பொதுமக்கள் கண் விழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனீவா நகரில் உள்ள Eaux-Vives பகுதியிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் 26 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். ஞாயிறன்று காலை சுமார் 6 மணி அளவிலேயே சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கி சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசாரை நேரில் பார்த்ததும் மூவர் அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த மூவரும் அகதிகள் எனவும், ,அதில் ஒருவரை பொலிசார் கைது செய்ததும் பின்னர் தெரியவந்தது.

மாயமான இருவரும் இதுவரை பொலிசில் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சுற்றுவட்டார பகுதியில் இருந்து திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞரை போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தியும் உள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers