சுவிஸில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை: நல்ல செய்தி வெளியிட்ட மருத்துவர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சாலையோரத்தில் இருந்து விவசாயி ஒருவரால் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைக்கு பின்னர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெர்ன் மண்டலத்தின் Därstetten பகுதியில் கடந்த 4 ஆம் திகதி சாலையோரத்தில் இருந்து விவசாயி ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை மீட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த குழந்தையை அவரிடம் இருந்து கைப்பற்றிய பொலிசார், மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தொடர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது குழந்தை ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிறந்து 3 கிழமைகளேயான குழந்தையின் நிலை மீட்கப்படும்போது கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது குழந்தை நலமடைந்துள்ளதால் காப்பகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக பெர்ன் மண்டல பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, குழந்தையின் தாயாரை கைது செய்துள்ள பொலிசார், விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அந்த தாயார் மற்றும் அவரின் வாழ்க்கை துணை மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...