இனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நீங்கள் இதுவரை எதையும் பார்க்கவில்லை, இனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பமாக இருக்கிறது என்று கூறியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கின் பின்னால் ஒரு கூட்டமே திரண்டு ஆதரவு தெரிவித்ததை சுவிட்சர்லாந்தில் காணமுடிந்தது.

அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார உச்சி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், லாசேனின் தனது ஆதரவாளர்களிடையே பேசினார், உலகமே உற்று நோக்கும் குட்டிப்பெண்ணான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது கிரேட்டா, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையில் உலகத்தலைவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, எவ்வளவு தைரியம் உங்களுக்கு என்று கேட்க, கோபம் பொத்துக்கொண்டு வந்தது அத்தனை பேருக்கும்.

ஒழுங்காக பள்ளிக்குப்போகிற வேலையைப் பார் என்றார்கள் சிலர். இப்போது, நீங்கள் இதுவரை எதையும் பார்க்கவில்லை, இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறியிருக்கிறார் கிரேட்டா.

அவரது ஆதரவாளர்களுக்கு அது உற்சாகத்தை அளித்தாலும், எத்தனை உலகத் தலைவர்களுக்கு காதில் புகை வரப்போகிறதோ தெரியவில்லை.

கையில் ’சீதோஷ்ணத்திற்காக பள்ளிக்கு விடுமுறை’ என்ற பதாகையுடன், சுவிட்சர்லாந்தில் தனது ஆதரவாளர்கள் முன் பேசிய கிரேட்டா, இந்த பத்து ஆண்டுகளில் சீதோஷ்ண மாற்றத்திற்காக இதுவரை எந்த உண்மையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.

இது மாறவேண்டும் என்று கூறிய கிரேட்டா, உலகத் தலைவர்களுக்கு செய்தி சொல்வதுபோல், இது வெறும் ஆரம்பம்தான், இதுவரை நீங்கள் எதையும் பார்க்கவில்லை என்று கூற, கூடியிருந்த கூட்டம் வசியம் செய்யப்பட்டதுபோல், கிரேட்டா, கிரேட்டா என முழங்குவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers