சுவிஸில் திடீரென்று ஸ்தம்பித்த அவசர உதவி இலக்கங்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
256Shares

சுவிஸில் பல்வேறு மண்டலங்களில் திடீரென்று அவசர உதவி இலக்கங்கள் அனைத்தும் ஸ்தம்பித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் திடீரென்று பொலிஸின் அவசர உதவி இலக்கங்கள், தீயணைப்பு படை மற்றும் அவசர சேவைகளின் இலக்கங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை காலை ஸ்தம்பித்துள்ளது.

இது தொலைத்தொடர்பு கோளாறினால் ஏற்பட்டது என பின்னர் தொடர்புடைய அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பல்வேறு பகுதிகளில் 117 இலக்கம் மட்டும் பயன்பாட்டில் இருந்துள்ளது. மேலும், சூரிச் மண்டல பொலிசாருக்கு மொபைல் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்துள்ளது.

இதனையடுத்து சூரிச் பொலிசார் இரண்டு மொபைல் எண்களை அவசர உதவிக்காக அறிவித்தனர்.

சில மண்டலங்களில் அழைப்புகள் வரப்பெற்றதாகவும், ஆனால் இங்கிருந்து தொடர்பு கொள்ள தாமதம் ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்