சுவிட்சர்லாந்தை உலுக்கிய சிறுவன் கொலை விவகாரம்: கொலையாளியின் நடுங்கவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பரபரப்பான சாலையில் 7 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், கைதாகி விசாரணையை எதிர்கொண்டுவரும் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாசல் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி 7 வயது கொசோவோ சிறுவன் கொல்லப்பட்டான்.

பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு தனியே திரும்பும் நிலையில், பெண்மணி ஒருவரால் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் இறந்துள்ளான்.

இந்த விவகாரத்தில் 76 வயது பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

தற்போது உள்ளூர் பத்திரிகை ஒன்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த குறித்த பெண்மணி,

இந்த கொலையை பல நாட்களாக திட்டமிட்டு நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட சிறுவனுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள குறித்த பெண்மணி,

அதிகாரிகளின் கவனத்தை தன்பால் ஈர்க்கவே கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே குறிப்பிட்ட சிறுவனின் பாடசாலை அருகே நோட்டமிட்டதாகவும்,

அங்குள்ள சிறார்களுடன் பொழுதை போக்கியதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தன்று சமையலறை கத்தி ஒன்றை மறைத்து வைத்து சாலையில் காத்திருந்ததாக கூறும் அவர்,

வாய்ப்பு அமைந்தபோது சிறுவனை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் சிறுவன் மரணமடைந்ததாக உறுதி செய்த பின்னரே சம்பவ இடத்தில் இருந்து மாயமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணையின் பல கட்டத்தில் சிறுவனை கொலை செய்துள்ளதை மறுத்து வந்த குறித்த பெண்மணி,

பின்னர் கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டதுடன், அதற்கான காரணங்கள் ஏதும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிறுவன் கொலை விவகாரமானது சுவிட்சர்லாந்தை மட்டுமின்றி கொசோவோ நாட்டை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்