வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை பறிக்க முடிவுசெய்துள்ள சுவிட்சர்லாந்து!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வெளிநாட்டவர்களில் சில குழுவினருக்கு அளிக்கப்பட்டுவந்த உதவிகள் மிக அதிகம் என சுவிட்சர்லாந்து அரசியல்வாதிகள் கருதுவதால், அது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஆகவே சிலருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை பறிக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

EU-28 மற்றும் EFTA நாடுகளைச் சேராத, மூன்றாம் நாட்டவர்கள் என்று அழைக்கப்படும் மற்ற நாட்டவர்களை குறிவைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்த குழுவினர் சுவிஸ் மக்கள்தொகையில் வெறும் 8 சதவிகிதம்தான் என்றாலும், அரசு உதவி பெறுவோரில் அவர்கள் 33 சதவிகிதம் என்பது அரசியல்வாதிகளின் கண்ணை உறுத்துகிறது.

எனவே, மூன்று நடவடிக்கைகளை அந்த குழுவினருக்கு எதிராக எடுக்க இருப்பதாக நேற்றைய தினம், அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி, சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வாழிட உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குதல், அரசு நிதியுதவி பெறுவோரின் வாழிட உரிமத்தை ரத்து செய்தல் மற்றும் இந்த மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழும் முதல் மூன்று ஆண்டுகளில் பெறும் அரசு நிதியுதவியை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்